समान नागरिक कानून जरूरी नहीं है…

(अंग्रेजी समाचार पत्र ‘मदरलैंड’ के संपादक श्री मलकानी से २३ अगस्त १९७२ को दिल्ली में हुअा वार्तालाप)

श्री मलकानी: राष्ट्रीयता की भावना के पोषण के लिए क्या आप समान नागरिक संहिता को आवश्यक नहीं मानते?

श्री गुरुजी: मैं नहीं मानता । इससे आपको या अन्य बहुतों को आश्चर्य हो सक्ता है, परंतु यह मेरा मत है और जो सत्य मुझे दिखाई देता है, वह मुझे कहना ही चाहिए ।

श्री मलकानी: क्या आप यह नहीं मानते कि राष्ट्रीय एकता की वृद्धि के लिए देश में एकरूपता आवश्यक है?

श्री गुरुजी: समरसता और एकरूपता दो अलग-अलग बातें हैं । एकरूपता जरूरी नहीं हैं । भारत में सदा अपरिमित विविधताएँ रही हैं । फिर भी अपना राष्ट्र दीर्घकाल तक अत्यंत शक्तिशाली और संगठित रहा है । एकता के लिए एकरूपता नहीं, अपितु समरसता आवश्यक है ।

श्री मलकानी: पश्चिम में राष्ट्रीयता का उदय, कानूनों की संहिताबद्धता, अन्य एकरूपता स्थापित करने का काम साथ ही साथ हुआ है?
 
श्री गुरुजी: यह नहीं भूलना चाहिए कि विश्व-पटल पर यूरोप का आगमन अभी हाल की घटना है और वहाँ की सभ्यता भी अभी नई ही है । पहले उसका कोई अस्तित्व नहीं था और हो सकता है कि भविष्य में उसका अस्तित्व न भी रहे । मेरे मतानुसार, प्रकृति अत्यधिक एकरूपता नहीं चाहती । अत: भविष्य में ऐसी एकविधताओं का पश्चिमी सभ्यता पर क्या परिणाम होगा, इस संबंध में अभी से कुछ कहना बड़ी जल्दबाजी होगी । आज और अभी की अपेक्षा हमें बीते हुए सुदूर अतीत में झाँकना चाहिए और सुदूर भविष्य की ओर दृष्टि दौडा़नी चाहिए । अनेक कार्यों के परिणाम सुदीर्घ, विलंबकारी एवं अप्रत्यक्ष होते हैं । इस विषय में सहस्रावधि वर्षों का हमारा अनुभव है । प्रमाणित सिद्ध हुई समाज-जीवन की पद्धति है । इनके आधार पर हम कह सकते हैं कि विविधता और एकता साथ-साथ रह सकती हैं तथा रहती हैं ।

श्री मलकानी: अपने संविधान से निर्देशक सिद्धांतों में कहा गया है कि राज्य समान नागरिक संहिता के लिए प्रयत्न करेगा?

श्री गुरुजी: यह ठीक है । ऐसा नहीं कि समान नागरिक संहिता से मेरा कोई विरोध है, किंतु संविधान में कोई बात होने मात्र से ही वांछनीय नहीं बन जाती । फिर, यह भी तो है कि अपना संविधान कुछ विदेशी संविधानों के जोड़-तोड़ से निर्मित हुआ है । वह न तो भारतीय जीवन दृष्टिकोण से रचा गया है और न उसपर आधारित है ।

श्री मलकानी: क्या आप यह मानते हैं कि समान नागरिक संहिता का विरोध मुसलमान केवल इसलिए कर रहे हैं, क्योंकि वे अपना पृथक अस्तित्व बनाए रखना चाहते हैं?

श्री गुरुजी: किसी वर्ग, जाति अथवा संप्रदाय द्वारा निजी अस्तित्व बनाए रखने से मेरा तब तक कोई झगड़ा नहीं है, जब तक कि इस प्रकार का अस्तित्व राष्ट्रभक्ति की भावना से दूर हटाने का कारण नहीं बनता ।

मेरे मत से कुछ लोग समान नागरिक संहिता की आवश्यकता इसलिए महसूस करते हैं कि उनके विचार में मुसलमानों को चार शादियाँ करने का अधिकार होने के कारण उनकी आबादी में असंतुलित वृद्धि हो रही है । मुझे भय है कि समस्या के प्रति सोचने का यह एक निषेधात्मक दृष्टिकोण है ।

वास्तविक समस्या तो यह है कि हिंदुओं और मुसलमानों के बीच भाई-चारा नहीं है । यहाँ तक कि धर्मनिरपेक्ष कहलानेवाले लोग भी मुसलमानों को पृथक जमात मानकर ही विचार करते हैं । निश्चित ही उनके वोट-बैंक के लिए उन्हें खुश करने का तरीका अपनाया है । अन्य लोग भी उन्हें मानते तो अलग ही हैं, किंतु चाहते यह हैं कि उनके पृथक अस्तित्व को समाप्त कर उन्हें एकरूप कर दिया जाए । तुष्टिकरण करनेवालों और एकरूपता लानेवालों में कोई मौलिक अंतर नहीं है । दोनों ही मुसलमानों को पृथक और बेमेल मानते हैं ।

मेरा दृष्टिकोण पूर्णत: भिन्न है । जब तक मुसलमान इस देश और यहाँ की संस्कृति से प्यार करता है, उसका अपनी जीवन-पद्धति के अनुसार चलना स्वागत योग्य है । मेरा निश्चित मत है कि मुसलमानों को राजनीति खेलनेवालों ने खराब किया है । कांग्रेस ही है, जिसने केरल में मुस्लिम लीग को पुनर्जीवित कर देश-भर में मुस्लिम सांप्रदायिकता को बढ़ावा दिया है ।

श्री मलकानी: इन्हीं तर्कों के आधार पर क्या यह नहीं कहा जा सकता कि हिंदू आ कोड का निर्माण किया जाना भी अनावश्यक और अवांछनीय है ?

श्री गुरुजी: मैं निश्चित रूप से मानता हूँ कि हिंदू- कोड राष्ट्रीय एकता और एकसूत्रता की दृष्टि से पूर्णत: अनावश्यक है । युगों से अपने यहाँ असंख्य संहिताएँ रही हैं, किंतु उनके कारण कोई हानि नहीं हुई । अभी-अभी तक केरल में मातृसत्तात्मक पद्धति थी । उसमें कौन सी बुराई थी ? प्राचीन और आधुनिक सभी विधि-शास्त्री इस बात पर एकमत हैं कि कानूनों की अपेक्षा रूढ़ियाँ अधिक प्रभावी होती हैं, और यही होना भी चाहिए । ‘शास्त्राद् रूढ़िर्बलियसी’ शास्त्रों ने कहा है कि रूढ़ियाँ शास्त्रों से प्रभावी हुआ करती हैं तथा रीतियाँ स्थानीय या समूह की हुआ करती हैं । स्थानीय रीति-रिवाजों या संहिताओं को सभी समाजों द्वारा मान्यता प्रदान की गई है ।

श्री मलकानी: यदि समान नागरिक कानून जरूरी नहीं है, तो फिर समान दंड-विधान की भी क्या आवश्यकता है?

श्री गुरुजी: इन दोनों में एक अंतर है । नागरिक संहिता का संबंध व्यक्ति एवं उसके परिवार से है । जबकि दंड-विधान का संबंध न्याय, व्यवस्ता तथा अन्य असंख्य बातों से है । उसका संबंध न केवल व्यक्ति से है, अपितु बृहद् रूप में वह समाज से भी संबंधित है ।

श्री मलकानी: अपनी मुस्लिम बहने को पर्दे में बनाए रखना और बहुविवाह का शिकार होने देना क्या योग्य है ?

श्री गुरुजी: मुस्लिम प्रथाओं के प्रति आपकी आपत्ति यदि मानवीय कल्याण के व्यापक आधार पर हो तब तो, वह उचित है । ऐसे मामलों में सुधारवादी दृष्टिकोण ठीक ही है । परंतु यांत्रिक ढंग से कानून के बाह्य उपचारों द्वारा समानता लाने का दृष्टिकोण रखना ठीक नहीं होगा । मुसलमान स्वयं ही अपने पुराने नियम-कानूनों में सुधार करें । वे यदि इस निष्कर्ष पर पहुँचते हैं कि बहुविवाह-प्रथा उनके लिए अच्छी नहीं है, तो मुझे प्रसन्नता होगी । किंतु अपना मत मैं उनपर लादना नहीं चाहूँगा ।

श्री मलकानी: तब तो यह एक गहन दार्शनिक प्रश्न बनता प्रतीत होता है ?

श्री गुरुजी: निश्चित ही यह ऐसा है । मेरा मत है कि एकरूपता राष्ट्रों के विनाश की सूचना है । प्रकृति एकरूपता स्विकार नहीं करती । मैं, विविध जीवन-पद्धतियों के संरक्षण के पक्ष में हूँ । फिर भी ध्यान इस बात का रहना चाहिए कि ये विविधताएँ राष्ट्र की एकता में सहायक हों । वे राष्ट्रीय एकता के मार्ग में रोडा़ न बनें ।

श्री गुरुजी समग्र
खंड ९: १९५,१९६,१९७, १९८
डा. हेडगेवार स्मारक समिति
डा. हेडगेवार भवन
महाल,
नागपुर – ४४००३२

இந்தியாவுக்குப் பொருந்தாத இந்து கோட்பில்களும் பொது சிவில் சட்டமும்…

இந்தியாவில் ஆண் பெண் ஆகிய இருபாலரது வாழ்க்கை முழுவதையும் கருத்தில் கொண்டு ஒவ்வொரு குடியும் தமக்கான சிவில் சட்டங்களை கொண்டு இன்றளவும் திகழ்கின்றன. அதாவது அக்குடியின் படி வாழக்கைக் கண்ணோட்டம், அதன்வழியே பிறப்பு முதல் இறப்பு வரை படிநிலைகள், எந்த நிலையில் என்ன நடக்க வேண்டும், அதற்கான வரம்புகள், பொறுப்புகள், கடமைகள், எழும் சிக்கல்களுக்கான தீர்வுகள் என அனைத்தையும் கொண்டு திகழ்கின்றன.

ஆனால் இவற்றை ஒரு குடியில் பிறக்கும் குழந்தைகள் அறிந்து கொண்டு விடாத படிக்கு பிரிக்க செய்யப்பட்ட ஏற்பாடே பள்ளிக் கல்வி முறை. பள்ளிக்கு அப்பாலும் பள்ளிகளின் வாயிலாக தரப்படும் கல்வியை சொல்லித்தர நிச்சயமாக பல வழிகளில் முடியும்.

இதில் தந்தை வழி சமூகங்களும் உள்ளன. தாய் வழிச் சமூகங்களுக்கும் உள்ளன. இவையிரண்டுமே இருபாலரது முழு வாழ்க்கையையும் கருத்தில் கொண்டு ஏற்பட்டவையாக உள்ளன.

மைசூர் மகாராஜா குடும்பம், திருவனந்தபுரம் அரச குடும்பம் அதன்படியே நாயர்கள் என்று நமதருகே எழும் தாய் வழிச் சமூக மரபுகள், துளு மக்களுக்கு (பன்ட், பில்லவா முதலிய குடிகள்) பூதாள பாண்டியன் ஏற்படுத்திய தாய்வழி ஆலியசந்தான மரபு என நீண்டு, மேகாலயாவில் காசி எனப்படும் குடியின் வாழ்க்கை முறை என்று விரிகிறது. இவை ஒன்றுக்கொன்றும் கூட பல வேறுபாடுகளை கொண்டுள்ளன.

இப்படி எண்ணற்ற வாழ்க்கை முறைகளை ஆயிரமாயிராம் ஆண்டுகளாக கொண்டு திகழும் இந்நாட்டுக்கு ஆணுக்கும் பயன்படாது பெண்ணுக்கும் பயன்படாது யாருக்கும் பயன்படாது இவை எல்லாவற்றையும் நாசமாக்கும் நோக்குடன், யாருடைய முழு வாழக்கைக்கும் உதவாத ஒரு உருப்படாத முறையை திணித்தவை தான் இந்து கோட் பில்கள்.

ஒரு உண்மயான இந்துத்வ அரசென்பது மேற்படி அனைத்து இந்துக் குடிகளுக்கும் அவர்களுடைய வாழ்க்கை வழிமுறைகளை மீட்டெடுத்துக் கொள்ள ஆவண செய்ய வேண்டுமே அன்றி அதை சுத்தமாய் துடைத்தெறியும் வண்ணம் பொது சிவில் சட்டமென்று முன்மொழிவது, பாரம்பரியம் பாரம்பரியம் என்று பேசுவோரைக் கொண்டே இந்நாட்டின் பண்பாட்டை கொலை செய்தவற்கு விரித்த வலையில் இந்துக்கள் சிக்கிக் கொண்டுவிட்டனர் என்பதைக் காட்டுவதாகும். தற்கொலைக்குச் சமமாகும்.

பெண்ணியம் பேட்ரியார்ச்சி என்று பேசும் இருபாலருக்குமே கூட தேவைப்பட்டால் மேற்படி தாய்வழி சமுதாயங்கள் எவ்வாறு வாழக்கை முழுவதையும் எடுத்துக் கொண்டு தீர்வுகளை அளிக்கின்றன என்று ஆராய்ந்து அவ்வழி போல் தமது வழிமுறையை அமைத்துக் கொள்ளலாம். அது இல்லையென்றால் புதிய தனி வழி ஏற்படுத்தி வாழ்ந்து கொள்ளலாம்.  ஆனால் அனைவரது வழியையும் அரசாங்கத்தை லாபி செய்து மாற்றும் உரிமை கிடையாது.

மாற்றுக் கருத்துக்களை மதிப்பதென்பது பல விசயங்களில் இணங்குகின்ற குடிகள் ஒருவருக்கொருவர் முரண்படுகிற விசயங்களில் அவரவர் அவரவர் போக்கில் அடுத்தவர் போக்கில் குறுக்கிடாது வாழ்ந்து கொண்டும் ஒருத்தரை மற்றொருவர் பொறுத்துக் கொள்வதுமே ஆகும்.

பொது சிவில் சட்டம் தேவையில்லாதது…

குருஜி கோல்வால்கர்
குருஜி கோல்வால்கர்

மதர்லேண்ட் என்ற ஆங்கில நாளிதழின் ஆசிரியர் ஶ்ரீ கே. ஆர். மல்கானிக்கும், ஆர். எஸ். எஸ் இரண்டாவது தலைவர் ஶ்ரீ குருஜி கோல்வால்கருக்கும் இடையே 1972 ஆம் ஆண்டு ஆகஸ்டு 23 ஆம் தேதி அன்று பொது சிவில் சட்டம். இந்து கோட் பில்கள், இஸ்லாமிய வாழ்க்கை முறையில் உள்ள குறைகளை களைவது தொடர்பாக தில்லியில் நடைபெற்ற உரையாடல்.

ஶ்ரீ மல்கானி:

தேசிய உணர்விற்கு ஊட்டமளிக்க நாட்டில் பொது சிவில் சட்டம் அவசியம் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

ஶ்ரீ குருஜி:

நான் அப்படி நினைக்கவில்லை. நான் இப்படிச் சொல்வது உங்களுக்கும் பலருக்கும் ஆச்சரியமளிக்கலாம். ஆனால் என் மனதிற்கு எது உண்மை என்று படுகிறதோ அதைச் சொல்ல வேண்டும் என்பதே என் கொள்கை.

ஶ்ரீ கே ஆர் மல்கானி:

நாட்டில் ஒற்றுமை வளர நீங்கள் தேசத்திற்கு ஒருரூபத்தன்மையை இன்றியமையாததாக கருதவில்லையா?

ஶ்ரீ கோல்வால்கர்:

ஒருங்கிணைவு (சமரசதா) என்பது வேறு. ஒருரூபத்தன்மை என்பது வேறு. ஒரு ரூபத்தன்மையின் அவசியம் எதுவும் இல்லை. இந்தியாவில் எக்காலத்திலும் எண்ணற்ற வேறுபாடுகள் மக்களிடயைே நிலவி வந்துள்ளன. ஆயினும் நாடானாது குறைவற்ற வலிமையும் ஒருங்கிணைப்பும் கொண்டதாகத் திகழ்ந்துள்ளது. ஒற்றுமைக்கு ஒருரூபத்தன்மை அவசியம் கிடையாது. ஒருங்கிணைவு இன்றியாமையாதது.

ஶ்ரீ கே ஆர் மல்கானி:

மேற்கத்திய நாடுகளில் தேசியத்தின் உதயம், சட்டங்களைத் தொகுத்தல், ஒரு ரூபத்தன்மையை ஏற்படுத்துதல் இவையெல்லாம் ஒரே நேரத்தில் நடந்ததே?

ஶ்ரீ கோல்வால்கர்:

உலக வரைபடத்தில் ஐரோப்பா முளைத்தது சமீபகால நிகழ்வு என்பதையும் அதன் நாகரிகம் மிகப் புதியது என்பதையும் நீங்கள் மறக்கக் கூடாது. ஐரோப்பா என்று ஒன்று இல்லாமல் இருந்தது. இனி அது இல்லாமலும் போகலாம்ஒரேயடியாக அச்சில் வார்த்து எடுத்தது மாதிரியான அமைப்பை இயற்கை விரும்புவதில்லை என்பது என் கருத்து. எனவே ஒற்றைத் தன்மை மிகுந்த ஐரோப்பிய நாகரிகம் வருங்காலத்தில் என்ன ஆகும் என்பதை இப்போதே சொல்வது பொருந்தாது. ‘இன்று, இப்போதுஎன்பதிலிருந்து சற்று நெடுந்தூரம் கடந்த காலத்திற்குள்ளும் நெடுந்தூரம் எதிர்காலத்திற்குள்ளும் பார்வையை செலுத்த வேண்டும். பல வேலைகளின் விளைவு தென்பட வெகுநாள் ஆகிறது. நிதானமாக, சந்தடியில்லாமல் வந்து சேர்கிறது. இந்த விஷயத்தில் பல்லாயிரம் ஆண்டுகால அனுபவம் பெற்றது நம் நாடு. சிறந்தது என்று நிரூபணம் ஆகியுள்ள சமுதாய வாழ்க்கை முறை உள்ளது. ஒற்றுமையும் வேற்றுமைகளும் ஒன்றாக இருக்க முடியும், இருக்கின்றன என்று நம்மால் கூற முடியும்.

கே ஆர் மல்கானி:

அரசியல் சாசனத்தின் வழிகாட்டிக் கோட்பாடுகளில் பொது சிவில் சட்டம்காண அரசு முயற்சி செய்யும் என்று சொல்லப்படுகிறதே?

ஶ்ரீ குருஜி கோல்வால்கர்:

உண்மைதான். ‘பொது சிவில் சட்டம்என்பதுடன் எனக்கு விரோதம் எதுவும் இல்லை. ஆனாலும், அரசியல் சாசனத்தில் இடம் பெற்றிருப்பதால் மட்டும் எதுவும் விரும்பத்தக்கதாகிவிடும் என்பதற்கில்லை. நம் அரசியல் சாசனம் பல்வேறு நாடுகளின் அரசியல் சாசனங்களில் இருந்து பெயர்தெடுத்தும், ஒட்டுப் போட்டும் தயாரிக்கப்பட்டது என்பதையும் கவனிக்க வேண்டும். அது இந்திய வாழ்க்கைக் கண்ணோட்டத்தை பிரதிபலிப்பதாகவோ அதை ஆதாரமாக கொண்டதாகவோ உருவாக்கப்படவில்லை.

ஶ்ரீ மல்கானி:

முஸ்லீம்கள் தாங்கள் தொடர்ந்து தனிப்பட்டு இருப்பதற்காகவே பொது சிவில் சட்டத்தை எதிர்க்கிறார்கள் என்பதை ஏற்கிறீர்களா?

ஶ்ரீ குருஜி:

எந்தப் பிரிவினரும் சாதியினரும் சம்பிரதாயத்தவரும் தங்கள் தனித்தன்மையை கட்டிக் காப்பதை நான் எதிர்க்கமாட்டேன். அந்த தனித்தனமையானது அவர்களை தேசிய உணர்விலிருந்து விலகிப் போகச் செய்யாத வரை எனக்கு ஆட்சேபமில்லை.

முஸ்லீம்களுக்கு நான்குமுறை திருமணம் செய்துகொள்ள உரிமை உள்ளதால் பொது சிவில் சட்டம்இல்லாத நிலையில், அவர்கள் ஜனத்தொகை, சம விகிதத்தை மீறி அதிகரித்துவிடும் என்று சிலர் பயப்படுகிறார்கள் என்று நினைக்கிறேன். பிரச்சனையை அணுகுவதில் இது எதிர்மறையான போக்கு என்று அஞ்சுகிறேன்.

ஹிந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே சகோதர உணர்வு இல்லை என்பதுதான் உண்மையான பிரச்சனை. இது எந்த அளவிற்கு போயிருக்கிறது என்றால் மதச்சார்பற்றவர்கள் என்று சொல்லப்படுவோர் கூட முஸ்லீம்களை தனித்தோர் சமூகமாகக் கணக்கிட்டே சிந்தனை செய்கிறார்கள். தங்கள் வாக்கு வங்கியைக் காப்பாற்றிக் கொள்ள அவர்களைக் குஷிப்படுத்தும் வழிமுறையைக் கடைபிடிக்கிறார்கள் என்பது உறுதி.

இன்னும் சிலர் முஸ்லிம்கள் தனிப்பட்டு இருப்பதைப் பார்க்கிறார்கள். ஆனால் முஸ்லீம்களின் தனி இருப்பையே ஒழித்து அவர்களை ஒரேரூபமாாக்கிவிடலாம் என்று நினைக்கிறார்கள்.

குஷிப்படுத்துவோர் ஒருரூபமாக்க நினைப்போர் ஆகியோரிடையே அடிப்படை வித்தியாசம் ஏதுமில்லை. இருவருமே இஸ்லாமியர்களை தனிப்பட்டவர்களாக பொருந்தாப் பிரிவினராக பார்க்கிறார்கள்.

என்னுடைய கண்ணோட்டம் முற்றிலும் மாறானது. முஸ்லீம்கள் இந்த தேசத்தை அதன் கலாச்சாரத்தை நேசித்தால் அவர்கள் தங்கள் சொந்த வாழ்க்கை முறையைப் பின்பற்றுவது வரவேற்கத் தக்கது.

அரசியல் விளையாட்டு விளையாடுபவர்கள் முஸ்லீம்களை கெடுத்துவிட்டார்கள் என்று நான் உறுதியாகக் கூறுவேன். காங்கிரஸ் கட்சிதான் கேரளத்தில் முஸ்லீம் லீகிற்கு புத்துயிர் அளித்து தேசம் முழுவதும் முஸ்லீம் வகுப்புவாதத்தை வளர்த்துவிட்டிருக்கிறது.

ஶ்ரீ மல்கானி:

இதே வாதத்தின் அடிப்படையில் ஹிந்து கோட்சட்டம் கொண்டு வந்தது கூட தேவையற்றது, விரும்பத்தகாதது தானே?

ஶ்ரீ குருஜி:

நான் உறுதியாகச் சொல்வேன். தேசத்தின் ஒருமைக்கும் மக்களின் ஒருங்கிணைப்புக்கும் ஹிந்து கோட்சட்டம் முற்றிலும் தேவையற்றது. யுக யுகாந்தரமாக நம் நாட்டில் எண்ணற்ற சம்ஹிதைகள் இருந்துள்ளன. ஆனால் அவைகளால் ஒரு தீங்கும் ஏற்பட்டதில்லை.

சமீப காலம் வரை கேரளத்தில் தாய்வழி உரிமையை ஆதாரமாகக் கொண்ட வழிமுறை இருந்தது. அதில் என்ன கேடு வந்து விட்டது? பழைய காலத்தவர்கள், இன்றைய காலத்தைச் சேர்ந்தவர்களான எல்லா வழக்கறிஞர்களும் சட்ட வல்லுநர்களும், ‘சட்டங்களை விட மரபுகளே (சம்பிரதாயங்களே) மக்களிடம் அதிக நம்பிக்கை பெற்றது. அன்றியும் அது சரியும் கூடஎன்கிறார்கள்.

சாஸ்த்ராத் ரூடிர்பலீயஸி‘ (சாஸ்திரங்களைவிட சம்பிரதாயமே அதிக பலம் வாய்ந்தது). இந்த சம்பிரதாயங்கள் ஒரு குறிப்பிட்ட வட்டாரத்திலோ ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் செல்வாக்குடன் இருக்கலாம் என்கிறது சாஸ்திரம்.

வட்டாரங்களைப் பொறுத்த ரீதி ரிவாஜ்‘ (பழக்க வழக்கங்கள்) அல்லது சம்ஹிதைகளுக்கு எல்லா சமூகங்களிலும் அங்கீகாரம் இருந்து வந்துள்ளது.

ஶ்ரீ மல்கானி:

பொது சிவில் சட்டம் தேவையில்லையென்றால் பொது குற்றவியல் சட்டம் மட்டும் அவசியமா?

ஶ்ரீ குருஜி:

இவ்விரண்டிற்கும் இடையே வித்தியாசம் உள்ளது. சிவில் சட்டம் தனிநபர், அவர் குடும்பம் இவை பற்றியது. ஆனால் குற்றவியல் (Criminal) சட்டம், நீதி, ஒழுங்குமுறை போன்ற எண்ணற்ற விஷயங்களுடன் சம்பந்தப்பட்டது. அது தனிநபர் மட்டுதல்லாது முழு சமுதாயத்துடனும் கூட தொடர்புள்ளது.

ஶ்ரீ மல்கானி:

நம் முஸ்லிம் சகோதரிகள் பர்தா அணிவது தொடர்கிறது. இவர்கள் பலதாரமணங்ககளால் பாதிக்கப்படுகிறார்கள். இது தகுமா?

ஶ்ரீ குருஜி:

முஸ்லிம் வழக்கங்களைக் குறித்து உங்கள் ஆட்சேபம் மக்கள் நலம் அடிப்படையில் தோன்றியதானால், தவறில்லை. இவ்வித சந்தர்ப்பங்களில் சீர்திருத்த அணுகுமுறை சரியே.

ஆனால் இயந்திரங்கள் மூலம் உற்பத்தி செய்வதுபோல், சட்டங்கள் இயற்றி அவற்றின் மூலம் சமத்துவம் திணிப்பது சரியல்ல.

முஸ்லிம்கள் அவர்களாகவே தங்களின் பழைய மரபுகள், சட்டங்களில் சீர்திருத்தம் கொண்டு வரட்டும். அவர்களே பலதார பலதார திருமணங்கள் சரியல்ல என்ற முடிவுக்கு வந்தால் எனக்கு சந்தோஷமே. ஆனால் என் கருத்தை அவர்கள் மேல் திணிக்க விரும்ப மாட்டேன்.

ஶ்ரீ மல்கானி:

அப்படியென்றால் இது பெரிய சித்தாந்த ரீதியான பிரச்சனையாக உருவெடுக்கும்போல் தெரிகிறதே?

ஶ்ரீ குருஜி:

நிச்சயமாக இது அப்படித்தான். எல்லோரும் ஓர் அச்சில்வார்த்து எடுக்கப்பட்ட மனிதர்கள் போல் செயல்படுவது தேசங்களுக்கு நாசம் தான்.

இயற்கை ஒற்றைத்தன்மை அமைப்பை ரசிப்பதில்லை. நான் பன்முக வாழ்க்கை முறைகளைக் கட்டிக்காப்பதை ஆதரிப்பவன்.

ஆனால் இந்த வேற்றுமைகள் தேசிய ஒருமைக்கு துணைபுரிய வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். தேசிய ஒருமைக்கு இட்டுச் செல்லும் பாதைக்கு இடையூறாகி விடக்கூடாது.

மூலம்: ஶ்ரீ குருஜி சிந்தனைக் களஞ்சியம், பகுதி 9. / பக்கங்கள்: 216-219 / வெளியீடு: டாக்டர் ஹெட்கேவார் ஸ்மாரக் சமிதி, சென்னை. / பதிப்பாண்டு: 2006.