கடந்த நான்கு ஐந்து ஆண்டுகளாக பொது சிவில் சட்டத்தின் அவசியமின்மை குறித்தும், அரசுக்கு இந்துக்களுக்கு சிவில் சட்டம் வகுக்க உரிமையில்லாதது பற்றியும் ஏற்கனவே வகுத்துவிட்ட இந்து கோட் பில்களை ரத்து செய்யவும் வேண்டி பலரோடு நிகழ்த்திய உரையாடல்களை தொகுத்து ஒரு நாற்பது பக்க ஏடாக வெளியிட இருக்கிறோம்.
நம்மோடு தொடர்ந்து இவ்விசயமாக இணைந்து பணியாற்றி வரும் திரு. காரத்திக் தியாகராஜன் இதன் இன்றியமையாமையை வலியுறுத்தி வருகிறார். யாரும் சர்வதர்மா என்றால் என்ன என்று அறிந்து கொள்ள நல்லதொரு எளிய அறிமுக நூலாக இது அமையவேண்டும்.
- சர்வதர்மாவின் நோக்கம் என்ன?
பரந்துபட்ட பாரத தேசத்தின் அனைத்து தொல்குடிகளும் வாழ்க்கை குறித்து அவரவர் கொண்டுள்ள கண்ணோட்டத்தின் அடிப்படையில் நெறிமுறைகளை அமைத்துக் கொண்டு வாழ மீண்டும் வழிவகை செய்வதற்கு தேவையான அனைத்து விதமான காரியங்களையும் மேற்கொள்வதே சர்வதர்மாவின் நோக்கமாகும்.