1957 ஆம் ஆண்டு இந்திய பாராளுமன்றத்திற்கான இரண்டாவது பொதுத் தேர்தல் நடைபெற்றது. அதற்கு முன்னதாகவே இந்துக்களுடைய அவரவர் வாழ்க்கை முறைகளில் குறுக்கிடும் இந்து திருமணச் சட்டமும் இந்து வாரிசுச் சட்டமும் பொதுவாக திணிக்கப்பட்டிருந்தது.
தேபபிரசாத் கோஷ் தலைமையிலான ஜன சங்கம், தனது 1957 தேர்தல் அறிக்கையில், இந்துக்களின் அவரவர் வாழ்க்கை முறையில் குறுக்கிடும் வண்ணம் இயற்றப்பட்ட இவ்விருச் சட்டங்களையும் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் ரத்து செய்வோம் என வாக்குறுதி அளித்தது.
1 ஜனவரி 1957 தேதியிட்ட இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் இது குறித்து வெளியான செய்தி விவரங்கள் ஆதாரமாக கீழே கொடுக்கப்பட்டுள்ளன.