இந்து பிராமண ஜாதிகள் செய்ய வேண்டியது..

அவரவர் பிரதேச, ஜாதி, சம்பிரதாயங்களை அனுசரித்து கோத்திரம் பார்த்து திருமணம் செய்வதே பிராமண திருமணங்களின் அடிப்படை. பல பிராமண மேட்ரிமோனி இணைய தளங்கள், சேவைகள் கூட இதற்கு இன்றளவும் சான்றாதாரமாக நம் முன் கண் முன்னே திகழ்கின்றன.

2012 ஆம் ஆண்டு சீக்கியர்கள் அப்போது ஆட்சியில் இருந்த காங்கிரசார், எதிர் கட்சியினராக இருந்த பாஜக ஆகிய இரு கட்சிகளின் ஆதரவோடும் தங்களுக்கான சீக்கியத் திருமணச் சட்டத்தை பெற்றுக் கொண்டனர். சீக்கிய திருமணங்கள் இனி அச்சட்டதின் கீழ் தான் பதிவு செய்யப்படும்.

அது போல பிராமண ஜாதிகள் பொதுவான பிராமண விவாஹ சட்டம் பெற்று அதற்கு கீழ் அவரவர் வழக்கிற்கான சிறப்பு ஏற்பாடுகளை பெறலாம். இ்ல்லைனா பிராம்மண பிரிவுகளுடனான உறவு வரம்புகளும் இடம்பறும் வண்ணம் அவரவர்க்கன்று தனி திருமணச் சட்டங்களே கூட பெறலாம்.

இந்தச் சட்டம் யாருக்கல்லாம் பொருந்தும் என்றால் யார் இன்றளவும் கோத்திர முறை வழுவாது திருமண பந்தம் கடைபிடித்து வருகிறார்களோ அவர்களுக்கு பொருந்தும்.

கோத்திர முறையில் இதுவரை வந்து இனி தனக்கு இப்படி வேண்டாம் என்பவர்கள் இந்து கோட் பில்களுக்குள் தொடரட்டும். இல்லை வேறு எதாவது இப்போது பிரபலமாக்கப்பட்டு வரும் புனைவான குண-கரும பிராமண பிரிவாக இனங்காணப்படட்டும். அவர்களை யாரும் தடுக்கவில்லை. அதே போல் இப்படி கோத்திரம் பார்த்து திருமணம் என்று கடைபிடித்து வரும் திருமண முறையே தங்களுடைய அங்கீகாரம் பெற்ற முறையாக வேண்டும் என்று கோருவோரை பிறரும் தடுக்க முடியாது.

இதனால் அனைவரும் பகிர்ந்து கொள்ளும் தேச நலன் தொடர்பான விசயங்களில் ஒன்று படுவதற்கு ஒரு குந்தகமும் ஏற்படாது. அவை அதற்குரிய மட்டத்தில் தொடரட்டும். பொது சிவில் சட்டம் கோத்திரம் பார்த்து திருமணம் செய்து தொடர விரும்பும் பிராமண ஜாதியினருக்கு பொருந்தாது. அதனை ஏற்க அவர்களை நிர்பந்திக்கவும் கூடாது.

இதற்கு தங்கள் வாழ்க்கை முறை தங்களுக்கு என்ற உணர்வுடைய மற்றனைத்து இந்து குடிகளும், பன்முகத்தன்மை வாய்ந்த இந்திய சமுயதாயத்தில் உறுதியான நம்பிக்கையுடையோரும் கூட முன்வந்து ஆதரவு தர வேண்டும். அப்படி செய்வது அவர்கள் தங்கள் வாழ்க்கை முறையை இதே வழியில் முறையாக மீட்டுக் கொள்ளவும் முகாந்திரமாய் அமையும் என்று சர்வதர்மா கருதுகிறது.

இத்தகையதொரு முயற்சியை பிராமண குடிகள் மேற்கொள்வதற்கு சர்வதர்மா தனது முழு ஆதரவை தருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.